மேல் மாகாணாத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்டங்களுக்கு வெளியேறக்கூடிய 12 இடங்களிலும் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் மேல்மாகாணத்திற்குள்ளேயும் இன்று(28) விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பாதுகாப்பு தரப்பினரால் மற்றும் சுகாதார தரப்பினரால் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் இருந்து பஸ்களின் மூலம் வெளியேறும் பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.