ஹட்டனில் உள்ள மற்றுமொரு பாடசாலையிலும் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையிலிருந்த மாணவனை சுகயீனம் காரணமாக டிக்கோய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் ஆன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மாணவரின் வகுப்பைச் சேர்ந்த 37 மாணவர்களும் 14 ஆசிரியர்களும் தொற்றுக்குள்ளான மாணவனின் தாய் கடமையாற்றும் ஹட்டன் கல்வி வலய காரியாலயத்தில் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.