Wednesday, January 20, 2021

அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று(20) பதவி ஏற்றார்.



அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்றார்.அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.

அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார்.இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தேர்வானார் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைக்குப் பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!