Monday, January 18, 2021

தோட்டத் தொழிலாளர்களின் நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

பெருந்தோட்டத்துறைக்கான நிலையான வருமானத்திற்கான வரைவு மாதிரியை உறுதி செய்வதற்கான இறுதி முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் தோட்டத் தொழிலாளர்களின் தொழில் வாழ்வாதாரத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்துகின்றது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த புதிய நிதித் திட்ட வரைவுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் நாளாந்தம் நிலையான சம்பளமாக ரூ.1,105 நிர்ணயித்துள்ளன.அத்துடன் நாளாந்த வருகை உற்பத்தித்திறன் ஊக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இவற்றை தொழிற்சங்கங்கள் முன்னர் எதிர்த்தபோதும் சமீப காலமாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றியுள்ளன.

இதன் பிரகாரம் அடிப்படை சம்பளம் ரூபா 700,ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி(EPF/ETF) ரூபா 105,வருகை ஊக்குவிப்புத் தொகை ரூபா 150,உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொகை ரூபாய் 150 என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் ரூபா 6,250 அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட நாள் சம்பளம் மாதிரிக்கு மேஅதிகமாக தொழிலாளர்களுக்கு இறுதியாக பயனுள்ள ஊக்கத் தொகைகள் வழங்கப்படுவதை அவர்களின் உற்பத்திதிறனை அதிகரிப்பதன் மூலம் வெகுமதி பெறுவதை உறுதி செய்வதற்காக உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட வருமானம் ஈட்டும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் பரிந்துரைத்துள்ளன.

முன்மொழியப்பட்ட நிலையான நாளாந்த சம்பளம் மாதிரி வாரத்தில் மூன்று நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.ஏனைய நாட்களில் அவை இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் முன்வைக்கும் தனித்திறன் சார்ந்த இரண்டில் ஒன்றை அடைவதற்காக தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ரூபா 1,105 அதிகம் வருமானத்தை அடையலாம்.

உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட கூறுகளின் கீழ் ஊழியர்களின் பறித்த ஒவ்வொரு கிலோ எடைக்கும் ரூபா 50 (EPF/ETF உட்பட) தொகையையும் இறப்பரை பொறுத்தமட்டில் ஒரு கிலோவிற்கு ரூபாய்125 (EPF/ETF உட்பட) வழங்கப்படுகின்றது.

மாற்றுத் திட்டமாக இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர் துறையில் வெற்றியுடன் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ளதை போலவே அதிக வருமானத்தை வழங்கும் வருமானம் வரக்கூடிய மாதிரியின் அடிப்படையில் ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள். இந்த இரண்டு மாதிரிகளையும் தொடர விரும்பாத நிறுவனங்கள் நிலையான நாளாந்த சம்பளம் முறையை தொடர உரிமையை (தங்கள் விருப்பப்படி) வழங்கும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!