உடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் உடபுசல்லாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் அங்கு ஜனவரி 15ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார் என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று இரவு 10.50 மணிக்கு அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அறிக்கையின் பிரகாரம் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களுடன் சேர்த்து கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 264 ஆகும்.
உடப்புசல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞன் covid-19 தொற்று நிலைமை மற்றும் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று நிலைமையே மரணத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.