ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 94வது இடத்தை பிடித்துள்ளது.
டிரன்ஸ்பரென்ஸி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு (ஊழல் உணர்வு குறியீடு-2020) 2020 ஆம் ஆண்டின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இக் கணக்கெடுப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இலங்கையானது நூற்றுக்கு 38 புள்ளிகளைப் பெற்று 94வது இடத்தை பிடித்துள்ளது.
இதன்படி டென்மார்க்,நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகக்குறைந்த ஊழல் உள்ள நாடுகளாக 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.
அதேவேளை சிரியா,சோமாலியா, தென்சூடான் ஆகியன முறையே 14,12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசியாக இடம்பெற்றுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் புள்ளி நிலையானதாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டில் 89வது இடத்திலிருந்து இவ்வருடம் கீழிறங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.