Wednesday, January 20, 2021

டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் மேலும் ஒரு தாதிக்கு கொரோனா வைரஸ் தொற்று!



டிக்கோயா - கிளங்கன் வைத்தியசாலையில் மேலும் ஒரு தாதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நாவலப்பிட்டிய சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இன்று(20) காலை வெளியான பிசிஆர் பரிசோதனைகளின் முடிவிலேயே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த தாதியோடு நெருங்கிய தொடர்பில் இருந்த 9 தாதியர்கள்,6 உதவியாளர்கள் உட்பட 15 பேர்,14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தாதி நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்றும் இவர் இதற்கு முன்பு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் 7ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்த தாதி தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரிந்து வந்த உத்தியோகத்தர்களில் 50க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!