கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று.
கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற சாதனையை சூரரைப்போற்று திரைப்படம் படைத்தது.
இந்த முறையை கொரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்கள் ஒஸ்கார் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
அந்த வரிசையில் பொதுப்பிரிவில் சூரரைப்போற்று திரைப்படம் சிறந்த நடிகர்,சிறந்த நடிகை,சிறந்த இயக்குனர்,சிறந்த இசையமைப்பாளர்,சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது.
இதையடுத்து இந்த போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும்.அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஒஸ்கார் மேடையில் அறிவிப்பார்கள்.