இலங்கையில் Oxford-AstraZeneca Covid-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர்,பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.