தென் கொரியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-Yong) ஊழல் குற்றத்திற்காக இன்று(18) இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீண்ட நாட்களாக நீடித்த வழக்கு இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
லீயின் தந்தை சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் சொத்துக்கள் அவரது வாரிசுகளின் கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி மொத்த சொத்துக்களை பெறுவதற்கு பெருந் தொகையை வாரிசு வரியாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக லீ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.நீதிமன்ற தீர்ப்பு சாம்சங் நிறுவனத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை உருவாக்கலாம் என நம்பப்படுகிறது.