கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(08) உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி சுமார் 50க்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.