Friday, January 8, 2021

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.



மின்னல் வேக ஹைபர்லூப் பயணம்,செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி,அதிவேக எலக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவு திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க்.

கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் இன் சொத்து மதிப்பு நியூயார்க்கில் இன்று காலை 10:15 மணிக்கு 188.5 பில்லியன் டொலராக இருந்தது. இது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசைவிட 1.5 பில்லியன் டொலர் அதிகமாகும்.

டெஸ்லாவின் பங்கு அதிவேக வளர்ச்சியில் செல்வதால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஆண்டு மட்டும் டெஸ்லாவின் பங்குகள் 743 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஜெஃப் பெசோஸ் கடந்த 2017 அக்டோபர் மாதம் முதல் உலக பணக்காரர் பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!