Tuesday, January 19, 2021

இன்று ஒரே நாளில் 627 பேருக்கு கொரோனா... 6 பேர் பலி!

இலங்கையில் மேலும் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிபடுத்தினார்.


அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி கொழும்பு 3 பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது உடைய ஆண் ஒருவரும், முகத்துவாரம் பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும்,களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றையதினம் இதுவரையில
 627 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய மினுவாங்கொடை சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 49,901 ஆக அதிகரித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!