நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் முதலாவது மரணம் இன்று (09) பதிவானது.
உயிரிழந்தவர் 69 வயதானவர் என்றும் இவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் என்றும் பிசிஆர் பரிசோதனையின் போது இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டத்தின் பிராந்திய சுகாதார உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.