நாட்டு சனத்தொகையில் 75 சதவீத கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவென நிலையான வேலைத்திட்டம் அவசியம் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்போது சட்ட திட்டங்களில் தங்கி இருக்காது மக்கள் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற அரசு ஊழியர்களுக்கான நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பணத்தை உள்நாட்டு விவசாயிகளுக்கு செல்லும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே அலுவலகங்களில் இருக்காது நாட்டு மக்களின் பிரச்சினைகளை தேடிச்சென்று தீர்வு வழங்க அரசு ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.