2020ஆம் ஆண்டு உயர்தர செய்முறை பரிட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.
செய்முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் தங்களது பரீட்சை அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் பகுதியில் உள்ளவர்கள் பரீட்சையில் சமூகமளிப்பதற்காக தங்களது பரிட்சை அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை 011-2784208, 011-2784537 , 011-3188350 அல்லது 1911 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.