Thursday, January 7, 2021

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கிய கொரியா!

2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் பொருளாதார புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

2017 ஆம் ஆண்டு கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான செயற்பாட்டு கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. இது 2020ஆம் ஆண்டில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!