மேல் மாகாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களை நோக்கி வாகனங்களில் பயணிக்கும் சகலருக்கும் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பதினோரு இடங்களில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, எதிர்வரும் 28ஆம் திகதி முதல் வாகனங்களில் பயணிக்கும் சகலருக்கும் ரபிட் ஆன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகள், உதவியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம் மூவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.