Monday, January 25, 2021

துறைமுகத்திலிருந்து பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்த வசதி

அரசாங்கத்துக்கு சொந்தமான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் இறக்குமதிக்கு இணைய வழி ஊடாக கட்டணங்களை செலுத்த முடியும்.

இதற்காக மூன்று வழிமுறைகளை அதிகாரசபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைவாக துறைமுகத்தில் உள்ள தமது பொருட்களை வீடுகளில் அல்லது அலுவலகங்களில் இருந்தவாரே பெற்றுக்கொள்ள முடியும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வழிமுறையின் மூலம் மிக இலகுவாக தமது பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அதிகார சபையின் தலைவர் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் விரைவாக பொருட்களை துறைமுகத்திலிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!