கொழும்பில் இன்று(18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் பல பிரதேசங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கக்கூடிய சூழ்நிலை தற்போது நிலவுகின்றமை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், மேல் மாகாணப் பாடசாலைகளின் சகல வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளையும் மீள ஆரம்பிப்பது தொடர்பில், இரண்டு வாரங்களில் சுகாதார வழிகாட்டல்களை தயாரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.