Monday, January 18, 2021

இன்று ஆரம்பமான Park & ride சேவை வெற்றி..

கொழும்பு நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட Park & Ride பஸ் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த பஸ் சேவையை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருந்ததாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் பண்டுக சுவர்ண அங்ஸ இது தொடர்பாக தெரிவிக்கையில், இன்று காலை தொடக்கம் கொழும்பு நகரத்திற்கு வந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த பஸ் சேவையை பயன்படுத்தி தாமும் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!