ஹட்டனில் உள்ள பாடசாலை ஒன்றில் மேலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அந்தப் பாடசாலையின் மாணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே மேலும் ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.