கொழும்பில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகளுக்கான முன்னாயத்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதன் காரணமாகவே கொழும்பில் சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னோட்ட நிகழ்வுகள் எதிர்வரும் 30 திகதியிலிருந்து பெப்ரவரி 03 ஆம் திகதி வரை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன் குறித்த நாட்களில் காலை 06 மணியிலிருந்து மதியம் 01 மணிவரையும் சுதந்திர தினத்தன்று அதிகாலை 04 மணியிலிருந்து மதியம் 01 மணிவரையும் கொழும்பு சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.