Monday, January 18, 2021

இலங்கையில் இதுவரை பிசிஆர் பரிசோதனைகளுக்காக செலவழிக்கப்பட்ட மொத்த தொகை !

இலங்கையில் கொரோனா தொற்று தொடங்கிய காலப்பகுதியிலிருந்து இதுவரை நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்காக அரசாங்கம் ரூபா 6.48 பில்லியனை செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தொடங்கிய கொரோனா தொற்றையடுத்து நேற்று வரை 1,486,951 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் 22 அரசு நிறுவனங்கள் மற்றும் ஏழு தனியார் மருத்துவமனைகள் பிசிஆர் பரிசோதனைகளை நடத்துகின்றன.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 175,741 பிசிஆர் பரிசோதனைகளையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட ஆய்வகம் 139,981 பரிசோதனைகளையும் நடத்தியுள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்றால் நேற்றுவரை 264 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.53,000க்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!