புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 95 தற்காலிக கடைகள் நேற்றிரவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அபிவிருத்தி நடவடிக்கை என தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் குறித்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் குறித்த கடைகளை அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.