மஹர சிறைச்சாலையில் காணாமல் போயிருந்த,பிரித்தானிய யுகத்துக்குரிய 2 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மஹர சிறைச்சாலையின் நிர்வாக கட்டிடத்திலிருந்து காணாமல் போயிருந்த பிரித்தானிய யுகத்திற்குரிய இரண்டு வாள்கள் சிறையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையுடன் தொடர்புடையவர்களால் குறித்த வாள்கள் களவாடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சிறையில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது கைதிகளிடம் இருந்து போதை மாத்திரைகள்,கூர்மையான ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாள்களையும் இரண்டு குழுவினர் வெவ்வேறாக வைத்திருந்ததாகவும்,இதன்போது இவர்களுக்கு எதிரான குழுவினர் மீது வாள்களை வைத்திருந்த குழுவினர் தாக்குதல் நடத்தி காயப்படுத்தியுள்ளதுடன் இதன்போது 12 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.