பேலியகொடை மீன் சந்தையை மீள திறக்கும் வகையில் மொத்தவிற்பனை நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க அனுமதி அளித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எனவே சுகாதார வழிமுறைகளுக்கமைய விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மொத்த விற்பனை செயற்பாடுகளுக்காக பேலியகொடை மீன் சந்தை நாளை திறக்கப்பட உள்ளது.