Sunday, December 27, 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்ததுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதற்கமைய இதுவரை 40,380 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 598 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 235 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், இவர்களிடையே அவிசாவளை பிரதேசத்தில் மாத்திரம் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 84 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், கடந்த இரு தினங்களாக கொழும்பு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படினும், அவிசாவளை பிரதேசத்தில் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!