சப்ரகமுவ மாகாணத்தில் 917 பேருக்கு ஆசிரியர் நியமனம்.

சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகள் 917 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

நியமனம் வழங்கும் நிகழ்வு சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இன்று(28) நடைபெற்றது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதம செயலாளர் ரஞ்சனி ஜெயக்கொடி,மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன உட்பட கல்வி அதிகாரிகள்,அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.