Sunday, December 27, 2020

வீட்டிலிருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்!


வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் அவருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.குறித்த இளைஞனை கண்டுபிடிப்பதற்காக சப்புகஸ்கந்த பொலிஸார் பொது மக்களின் ஆதரவை எதிர்பார்த்துள்ளனர்.

சப்புகஸ்கந்த - மாகொல வடக்கு தேவாலய வீதி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நிமேஷ் மதுசங்க எனும் இளைஞனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த இளைஞர் தொடர்பில் தகவல் அறிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தப்பியோடிய இளைஞன் சப்புகஸ்கந்த பகுதியில்  வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இளைஞனை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!