அம்பகமுவ பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று!

அம்பகமுவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்ளிட்ட 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் மாத்தறை பகுதியிலுள்ள தனிமைப்படுத்தும் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களோடு வட்டவளை-லொனக் தோட்டத்தில் ஒருவரும்,ஹட்டன் குயில்வத்தையில் ஒருவரும், பொகவந்தலாவை லின்போல்ட் தோட்டத்தில் ஒருவருமாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.