புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியா முழுவதும் பரவல்!

புதிய வகை கொரோனா வைரஸ் பிரித்தானியா முழுவதும் பரவியுள்ளதாக அந்நாட்டின் தோற்று நோய் நிபுணர் பேராசிரியர் நீல் ஃபெர்குசன் எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள பெரும்பாலானோருக்கு அல்லது முழு ஐரோப்பாவுக்கும் புதிய வகை வைரஸ் பரவி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைந்த தொற்றாளர்களைக் கொண்ட டென்மார்க்கிலும் இந்தக் கொரோனா இனங்காணப்பட்டிருப்பதாகவும்,
இது ஐரோப்பா முழுவதிலும் பரவி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.