அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வனை இ.தொ.கா கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட பிறகு அதன் முடிவு வெளிவரும் வரை தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பல பொது நிகழ்வுகளில் பங்கேற்றியிருந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.