மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் சகலருக்கும் ரபிட் என்டிஜன் பரிசோதனை!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் சகலரையும் ரபிட் என்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட 1100 பரிசோதனைகளில் ஐவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.