பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதார பிரிவால் தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால் அதனை செய்ய தயாராக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் அனைவருக்கும் பிசிஆர் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மாதம் 31ஆம் திகதி தான் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சகோதர மொழி ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.