விமான நிலையத்தை திறந்து சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து சுகாதார நடைமுறைகளை தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தீர்மானங்களின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.