நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

 

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த நோர்வூட் தமிழ் மகாவித்தியாலய ஆசிரியை ஒருவர் உட்பட அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.அதனையடுத்து அவர்கள் மூவரும் கண்டி சுய தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்நிலையில் குறித்த ஆசிரியையோடு தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையிலேயே, தரம் ஒன்பதில் கல்வி பயிலும் வென்ச்சர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

 

இவர்களை சுய தனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்