நாடளாவிய ரீதியில் நாளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது குறித்து எத்தகைய தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு அமுலாக்கம் என நேற்று வாட்ஸ்அப் ஊடாக போலியான செய்தி வெளியானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு தவறான செய்தியை வெளியிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.