Thursday, December 3, 2020

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த தீர்மானம்!

 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை மேலும் தாமதப்படுத்தாமல் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 

மார்ச் மாதம் பரீட்சையை நடத்தி மூன்று மாதங்களில் அதன் பெறுபேறுகளை வெளியிடவும் தீர்மானித்துள்ளதாகவும், ஜூலை மாதம் இந்த மாணவர்களை உயர் வகுப்புகளுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!