Tuesday, December 8, 2020

தடுப்பூசி போடும் பணியை தொடங்கியது ரஷ்யா!

ஒருவழியாக உலகின் ஏதோ ஒரு மூலையில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

covid-19 நோய்தொற்றுக்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்து, ரஷ்யா அதை உற்பத்தி செய்து தற்போது பொது மக்களுக்கான பயன்பாட்டையும் தொடங்கிவிட்டது.
 
இது 95% கொரோனா தொற்றுக்களை தடுக்கக்கூடியது என்றும் பெரிய பக்க விளைவுகள் ஏதும் இதனால் ஏற்படவில்லை என்றும் இந்த மருந்தை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இன்னொரு பக்கம் பெரிய அளவிலான பரிசோதனைகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இரண்டு டோஸ்கள் (இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்வது) செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் டோஸ்தான் போடப்பட்டு வருகிறது.இந்த முதல் டோசை போட்டுக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஷ்யாவால் எவ்வளவு உற்பத்தி செய்யமடியும் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆண்டு முடிவில் 20 லட்சம் டோஸ்களை உற்பத்தியாளர்கள் தயாரித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாஸ்கோ நகரில் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.இவர்களில் பள்ளிகளில்,சுகாதாரத் துறையில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சமூக பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த ஊசி போட படுவதாக மாநகர மேயர் செர்கெய் சோபியானின் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி அதிகம் கிடைக்க கிடைக்க தடுப்பூசி பெறுபவர்களின் பட்டியல் நீளும் என்று அவர் கூறியுள்ளார்.

மாஸ்கோ நகரில் 70 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.மேலே குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட தொழில்களை செய்கின்ற 18 முதல் 60 வயதுக்குட்பட்ட நகரவாசிகள் ஒன்லைனில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் ஊசி போட்டுக் கொண்டவர்கள்,கடந்த இரண்டு வாரங்களில் சுவாசநோய் தாக்கியவர்கள்,சிலவகை நாள்பட்ட நோய் உள்ளவர்கள்,கர்ப்பிணிப் பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடுவதில்லை.

ஒவ்வொருவரும் இரண்டு முறை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் முதல் முறை ஊசி போடப்பட்ட பிறகு 21 நாட்கள் கழித்து இரண்டாவது ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.


Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!