Wednesday, December 9, 2020

சின்னத்திரை நடிகை சித்ராவின் திடீர் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்.

 


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

 

இவர் நசரத்பேட்டை யில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இறப்பதற்கு முன்பாக சித்ரா,இரவு அந்த ஹோட்டலில் தனது வருங்கால கணவருடன் இருந்துள்ளார்.எனவே பொலிசஸார் அவரது வருங்கால கணவரிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

 

அந்த விசாரணையில் மன அழுத்தத்தில் சித்ரா இருந்து வந்ததாகவும் மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் பொலிஸிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என பரவலாக கூறப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!