நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து, ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதாவது, ஹைதராபாத்தில் இன்று சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அறிகுறியற்ற கொவிட் பாதிப்புகள். மருத்துவர்களின் பாதுகாப்பில் நல்ல நிலைமையில் இருக்கிறார்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில், அவரது உடல்நிலை குறித்து நான் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றும் அவரின் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராதிகாவின் மகளுக்கு காது குத்தும் நிகழ்வு மிகவும் எளிமையாக வீட்டில் நடந்தது. இதில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.