கொரோனாவுக்கான ஒழிப்பு மருந்தை இலவசமாக தருவதாக கூறிய ஆயுர்வேத மருத்துவர்; அலைமோதிய மக்கள் கூட்டம்

கேகாலை பிரதேசத்திலுள்ள ஆயர்வேத மருத்துவர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு மருந்தைப் பெறுவதற்காக, இன்றையதினம்(8) அதிகளவான மக்கள் கூட்டம் குறித்த வைத்தியர் வசித்த பிரதேசத்தில் குவிந்துள்ளனர்.

இதனால் அந்த பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதுடன் கொரோனாவை மறந்து, மருந்தைப் பெறுவதற்காக மக்களும் முண்டியடித்துள்ளனர்.

அந்த மருந்தை இலவசமாக 5,000 பேருக்கு நேற்று வழங்குவதாக குறித்த மருத்துவர் அறிவித்தமையாலேயே மக்கள் முண்யடித்துள்ளனர்.

இந்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்த நிலையில்,குறித்த மருத்துவரால் வழங்கிய கொரோனாவுக்கு எதிரான மருந்தை அண்மையில் சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியும் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.