கொழும்பு மாவட்டத்தில் பாரிய அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மாளிகாவத்தை, வேல்லவீதி,மருதானை,வேகந்த ஆகிய பிரதேசங்களில் பெருமளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனரென குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு காரணம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு மக்கள் வழங்கும் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.