புரவி புயலின் பாதை தொடர்பான படத்தை 'ஸ்கைமெட்வெதர்' வெளியிட்டுள்ளது. புரெவிப்புயல் இலங்கையின் கிழக்குக் கரையை இன்று இரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ புயலின் தாக்கத்திற்கு முகம் கொடுக்கும் வகையிலான முன்னாயத்த நடவடிக்கையாக மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் மிகவும் விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
மேலும் புரெவிப்புயல் அச்சத்தால் திருகோணமலையில் 75,000 பேர் வரை நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.