கண்டி தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண் சிகிச்சை பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவில் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எனினும் வைத்தியசாலையின் ஏனைய பிரிவுகளில் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கண் சிகிச்சை பிரிவு ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.