மஹர சிறைச்சாலை கைதிகளின் உறவினர்கள்,சிறைச்சாலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

 

மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் சிறைச்சாலையில் மீதமிருந்த கைதிகளில் சிலர் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்றுகாலை அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு ஓரளவுக்கு பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவத்தை கேள்வியுற்ற கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் சிறைச்சாலைக்கு செல்லும் வீதியின் இருமருங்கிலும் நின்றிருந்தனர்.அதில் பெரும்பாலானவர்கள் சிறையில் இருப்போரின் தாய்மார் இன்னும் சிலர் கை குழந்தைகளுடன் வந்திருந்து கதறி அழுதனர்.

மஹர சிறையிலிருந்த பலருக்கும் பினைகள் கிடைத்துள்ளன எனினும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்பது அங்கு குழுமியிருந்தவர்களின் ஆதங்கமாக இருந்தது