மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த கலவரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிஐடியினர் இதுவரையில் 56 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையில் இருந்த கைதிகள் பல்வேறு வகையான போதை மாத்திரைகளை உட்கொண்டிருந்ததாகவும் இப்போதை மாத்திரைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி போதைப்பொருள் தொடர்பான நிபுணர்களிடம் இது தொடர்பான அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இக்கலவரத்தில் மஹர சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம்,கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.