பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள, ஹட்டன் நோட்டன்பிரிஜ் தண்டுகல தோட்டத்தில் இன்று(5) 16 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 9 பெண்களுக்கும், ஆண்கள் 7 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அந்தத் தோட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களோடு நெருங்கிப் பழகிய 35 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.