Tuesday, December 15, 2020

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி பலி.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான PT-6 ரக பயிற்சி விமானம் கந்தலாய் சூரியபுர ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனக்குடா வான்படை முகாமிலிருந்து புறப்பட்ட விமானத்தின் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்புகள் அற்றுப்போனதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

குறித்த பயிற்சி விமானத்தில் பயிற்சி விமானி மாத்திரமே பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்துக்குள் சிக்கியுள்ள விமானியை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!